விசா தேவையில்லை
விசா தேவையில்லை
விழிகளை மூடு
உனக்கு முன்
சுதந்திர தேவி.
தூக்கியிருக்கும் அவளின்
கைக்கு ஓய்வு கொடு.
வெள்ளை மாளிகைக்கு
வழி காட்ட சொல்.
ஒபாமாவை பேட்டி எடு.
முதல் கேள்வியாய் கேள்
உங்கள் மனைவிக்கு
புடவைக் கட்ட தெரியுமா?
அவர் மனைவி பக்கம்
திரும்பயில்
வாழ்க பாரதம் சொல்லி
விழிகளை திற.
--கனா காண்பவன்