செய்தது பாவம்

கற்றவை. கையிலிருக்க,
காவியம். வாயிலிருக்க,
கொற்றவை. கோபமிருக்க,
கொய்தலை! கொய்தலை!
என்றிடும் கொய் தொல்லை ஏனோ!!

அற்றவை யாவும் அறமென கூறும்,
அறியாமை நிழலை, விளங்கிடும்
விதி யெனும் வெயில் கொண்டு மீள்வேனா!!

மீள்வதும் மதியாயிருப்பின்! அதிலின்றி மாள்வேனா!
தண்டனை யாதெனில் தவறில்லா மன்னிப்பு!
நின்தனை செய்கையில் நிகரில்லா வெறுப்பு!!

எத்தினை யுத்தங்கள் கண்டினும் வீரன்!!
என்னிலை வந்திடின் நொண்டிடும் சூரன!!

வெற்றிடம் போன்றதாய் வெறிதிட்ட என் மனம்!
வெற்றிலை பாக்கில்லா சிவந்திடும் வெறித்தனம்!

காற்றிடை பூவாய் பூத்ததோா் பூவை!
கற்றாலை தீவாய் வாழ்திடும் பாவை!

அணை திங்கள் இணை கரம் வர!
துணை மஞ்சள் எனும் பொருள் தர!!

இருமனம் இணைந்ததாய் இதும் ஒரு திருமணம்!!
நறுமனம் நிறைந்ததாய் பேசிடும் பல மனம்!!!

இங்கனம் இக்கனம் இவள் எந்தன் சொப்பனம்!,
எங்கனம் சென்றினும் இவள்முகம் நூதனம்!!!

வாடிய நிலவினில் தேடினேன் ஒரு முகம்,
கூடிய இருள்தனில் கிடைத்தனா் இருவரும்!...

ஆத்திரம் கொண்டதால் ..!..ஆவேசம் ஆனதால்...
சமுத்திர குருதியும், அலைவேகம் ஆதலால்...

திண்டினேன் அவளை, உயிா்வரை சீண்டினேன்!...
சுண்டினேன் அவளை ! இரண்டாய் துண்டினேன்!!!...

தீா்ந்தது கோபம்!!!!!!!!!!!! ....................செய்தது பாவம்!!!!!!!!!!!!...............

எழுதியவர் : பவித்ரன் கலைச்செல்வன் (29-Jan-15, 5:42 pm)
பார்வை : 1899

மேலே