ஒரு தாயின் தவிப்பு

பத்து மாதம் கருவில் சுமந்தால்
பெண்ணெனும் பெருமையை அடைந்தால்
உறவுகளை மகிழ வைத்தாள்
உள்ளங்களை நெகிழ வைத்தாள்
குழந்தையை பெற்றெடுத்தாள்
குளம் தழைக்க வழி செய்தாள்
கண்ணீர் கலந்த மகிழ்வுடன் சிரித்தால்
கண் இமைபோல காத்து வளர்த்தால்
என் செல்வம் நீயென மகிழ்ந்தாள்
பசிக்கையில் பாலுட்டி வளர்த்தால்
தூங்கையில் பாட்டு சொல்லிகொடுத்தால்
முட்டி போட்டு நடக்கையிலே
மூணு தடவ முத்தமிட்டால்
கை பிடிச்சு நடக்கையிலே -ஊர்
கண்ணெலாம் பட்டுடுமுனு
கருபசாமி கோவிலிலே
கற்பூர தீபமேற்றி கண் போல
காத்து வளர்த்தேனே
சோறு தண்ணி உண்ணாம
அடம் பிடிச்சு அழுகையிலே
பால் நிலவி காட்டி
பால் சோறு ஊட்டி வளர்த்தேனே
பள்ளிக்கூடம் போகையிலே
பல்பம் தின்னு முடிச்சுபுட்டான்
பதறி அடிச்சு போனேனே -உன்
மகனுக்கு ஒன்னு அகலேன்னு
மருத்துவர் சொன்ன சொலக்கேட்டு
மகிழ்ச்சியோடு சென்றேனே
பத்தாவது தேர்வெழுத
பதினாறு சாமி கும்பிட்டேனே
பள்ளிபடிப்பு முடிஞ்சிடிச்சு
பட்டபடிப்பு தொடங்கிடிச்சு
கல்லூரி போகையிலே
கால்நடையா நடக்கையிலே
களெல்லாம் வலிக்குமுன்னு
மிதிவண்டி எடுத்து தந்தேனே
கல்லூரி முடிச்சுபுடன்
போராடி உழச்சுபுட்டான்
கண்கலன்கம பாத்துகிட்டான்
கல்லாணம் செஞ்சுவச்சேன்
காலங்கள் சில கடந்தன
மகன் மனைவியின் மந்திரத்தில்
மயங்கி - என்னை
மறந்தான்
மகனே உன்னை
ஈ எறும்பு கடிக்காமல்லும்
இளம் காத்து படாமலும்
வெயில் சுடாமலும்
வெறும் வயிற்றொடவும்
குளீர் தீண்டாமலும் - கண்ணில்
தூசு படாமலும் - காலில்
கண்ணின் இமை போலவும்
இமையின் நிழல் போலவும்
நிழலின் உயிர் போலவும்
உயிரில் உன்னை வைத்து
பார்த்து காது வளர்த்தேனே - என்
அருமை மகனே - உன்
மனைவியின் சொல் கேட்டு - என்னை
மனையை விட்டு போ என்றாய்
மனனம் கலங்கவில்லை மகனே - உன்னுடன்
மன்றாட மாட்டேன்
என் அருமை மகனே
மக்கள் வளத்தோடும்
மன்னன் புகழோடும்
மனமகிழோடு வாழ்வை - என்
மகனே.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (29-Jan-15, 6:56 pm)
பார்வை : 191

மேலே