மாற்றாதீர் பள்ளிகளை சந்தைகளாய்
பாரீர் பயிலும் அரும்பின் ஆர்வத்தை
கற்றிடும் கரும்பின் மகிழும் முகத்தை !
முதலில் பிறந்தோர் வழிகாட்டிடவே
அடுத்து வருவோர் பின்பற்றிடவே !
பிள்ளைகள் கரம்பற்றி எழுதுவதோ
பிஞ்சுகளின் தரமுயர உதவிடவே !
உணர்ந்திட்ட மூத்தோர் முன்வருதல்
புரிந்திட்ட இளையோர் முன்னேறுதல் !
வசதியுள்ளோர் கல்விக் கூடங்களிலே
வறுமையில் உழல்வோர் திண்ணையிலே !
மாறிடுமா இந்நிலையும் இவ்வுலகில்
காண்போமா இதிலாவது சமத்துவம் !
அனைவரும் பெற்றிடவே கல்விதனை
இணைந்திடுங்கள் இதயம் உள்ளோரே !
மாற்றாதீர் பள்ளிகளை சந்தைகளாய்
விற்காதீர் பட்டங்களை சமுதாயத்தில் !
பழனி குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
