ஆம் நான் பைத்தியகாரி தான்
"ஆம் நான் பைத்தியம் தான்"
தெரியாத ஆங்கிலத்தை
நுனிநாக்கில் உளறாமல்
தேனான தமிழில் திறம்பட
உரையாடுவதால்'
"ஆம் நான் பைத்தியம் தான் "
அரைகுறை ஆடை அணியாமல்
அங்காங்கே தேகம் காட்டி
ஆபாச அணிவகுப்பு நடத்தாமல்
அங்கம் மறைத்து நடப்பதால்'
"ஆம் நான் பைத்தியகாரி தான் "
கண்ணகி வேஷம் போடாமல்
அதுக்காக
கண்டவனோடும் போகாமல்
பண்பாடு காத்திட நினைகின்றேனே
"ஆம் நான் பைத்தியகாரி தான் "
பழிகளை என்மேல் போட்டாலும்
பணத்திற்காய் என்னை வளர்த்தாலும்
பாசத்தை மட்டும் பொழிகின்றேன்
"ஆம் நான் பைத்தியகாரி தான் "
ஏழை வயிற்றில் பிறந்ததினால்
இருப்பதை கொடுத்து பழகியதால்
எனக்கென எதுவும் சேர்க்கவில்லை
அதனால்
ஆம் நான் பைத்தியகாரி தான் .!