சத்ரிய நம்பிக்கை -ரகு

பழுதாகி நின்றிருந்த
பேருந்தின்
பரவிய நிழலை
நிரந்தரமென்று
நம்பிக்கை கொண்டன
வசிப்பிடந்தேடிய
சிற்றெறும்புகள்

புடைசூழப்
புறப்பட்டன
புற்றெழுப்ப

அவைகளின்
துரித நடையில்
புலனரிந்தது
வேலை
துவங்குவதின்
துடிப்பு

அணில்களும்
சாரையொன்றும்
சற்றே தரைதவழ்ந்த
காகங்களும்
அங்கு வந்துபோனபோது
எறும்புகளை
இகழ்ந்து பேசுவதில்
ஒத்திருந்தது

நிலையானதல்ல
இந்த நிழலென்று

பெரும் படைகளைக்
கூட்டிய எறும்புகள்
பொருட்படுத்தாமல்
மும்மூறப்பட்டன
புற்றுக்கு

பேருந்து
இடம்பெயர்ந்து விட்டது
பிறகுபோன
மரமொன்றும்
விறகாகிவிட்டது
இன்னபிற இடங்களிலும்
முறையேயான மாற்றங்கள்


இப்போதும்
சுறுசுறுப்புடனும்
துரிதமாகவும்
வாழ்க்கை நடத்த
வேறொரு நிழலில்
விரைந்திருந்தன
எறும்புகள்

சிற்றினத்தின்
சத்ரிய நம்பிக்கையையும்
உள்வாங்கிச் சிலிர்த்தது
இயற்கையின் பேராச்சர்யங்கள்!

எழுதியவர் : அ.ரகு (30-Jan-15, 10:15 am)
பார்வை : 249

மேலே