அம்மா -பலவிகற்ப இன்னிசை வெண்பாக்கள்
கருவறையில் நானும் சுருண்டிருந்தே நுன்னை
நிலவறையில் வீழ்த்தி விதையாய் முளைபெறவே
என்முகம் காணும் நிமிடமது காத்திருந்தே
உன்முகம் என்னைகண்டு பூக்கும் ...! 1
அற்புதமே அன்பொழுகும் சித்திரமே முப்பொழுதும்
நற்பதமாய் வந்துனை வந்தனை செய்திடினும்
பற்பல சிக்கல் உனக்கு வரும்பொழுதும்
சிற்சில கோபமில்லா தாயே ! 2