பேனாமுனையில் ஒரு முயற்சி
காலை சூரியனது கதிர்களும்,பறவைகளின் கீசல் சத்தங்களும் மனோரம்மிய சுழலை
வடிவமைத்தது.இந்த சூழலில் ஆரம்பிக்கப்படும் அந்த நாள் அனைவருக்கும் இன்பமான
மனநிலையை ஏற்படுத்திவிடும். அனால் இந்த காலைப்பொழுது ரம்மியாவிற்கு
மட்டும் மன உளைச்சலை தந்தது. அவளைப்பொறுத்தவரை "இந்த நாள் விடியாமல்
இருந்தாள் எவ்வளவு நன்றாக இருக்கும்?"என்று ஏங்கும் ஒரு நொந்து போன
தையலின் மனம்.
நாளை ரம்மியா கொழும்பு செல்ல வேண்டும்.நாளை பாடசாலையின் ஒரு
மாத விடுமுறையின் இறுதி நாள்.அவள் கொழும்பிலிருந்து அவளது வீட்டிற்கு வரும்
போது இருக்கும் முகவெளிச்சம் அவள் மீண்டும் கொழும்பு செல்லும் போது
இருக்காது.அவளது குடும்பம் ஓர் ஏழைக்குடும்பம்.கடந்த வருடம் அவள் எய்திய
பரீட்சை பெறுபேறுகளில் சிறந்த சித்தி பெற்றமையால் தனது ஊரிலிருந்து வேறொரு
நகரமான கொழும்பிலுள்ள பிரசித்தமான ஒரு பாடசாலையில் மேலும் இரண்டு
வருட கல்வியை தொடர ஏற்பாடு செய்தனர்.சித்தியின் வீட்டிலிருந்து
படிப்பதாகவும் அதற்கு ரம்மியாவின் பெற்றோர்கள் மாதப்பணம்
செலுத்துவதாகவும் உத்தேசம்.
அவளும் நகரில் தனது படிப்பை தொடர்ந்தாள் . நாட்கள் செல்ல
,செல்ல
சித்தியின் கொடுமை அவளை உளவியல் ரீதியாக
தாக்கியது.அவளது படிப்பிற்கு தொல்லை கொடுக்கின்ற முட்டுக்கட்டை
அவளது சித்திதான் .இதற்கு முன்னரும் ரம்மியா விடுமுறைக்கு
வீட்டிற்கு வந்தபோது 'அங்கு தனது கல்விக்கு பொருத்தமான சூழல்
இல்லை ,அதனால் தனது இலக்கை எட்ட முடியாதென 'பெற்றோரிடம்
அழுதுகொண்டே கூறிய சம்பவங்கள் ஏராளம் . ஒவ்வொரு முறையும் ரம்மியாவின்
பெற்றோர்கள் படிப்பை கைவிட்டுவிடாமல் அவள் தொடர்வதற்கு ஆறுதல்
அளிப்பனர் .'எங்களது கடன் சுமைகள் இவ்வருடத்துடன்
தீர்ந்துவிடும் .வருகின்ற வருடம் நாங்கள் உன்னுடன் கொழும்பிற்கு
வந்துவிடுவோம் ' என்று வழியனுப்பி வைப்பார்கள் .
நாளைதான் அடுத்த வருடம் .இம்முறையும் பெற்றோரது பேச்சுக்களை கேட்க
முடியாத அளவிடற்கு அவளது மனம் அவள் அனுபவித்த சித்தியின்
கொடுமைகளாலும் ,அதனால் அவள் படிக்க முடியாது பாடக்குறிப்பிற்கான
நேர இழப்பும் பலவீனப்படுத்தியிருந்தது. .பெற்றோரின் கழுத்தை
நெரிக்குமளவிற்கு வளர்ந்திருந்த கடன் சுமைகளும் ராம்மியாவை மேலும்
பலவீனப்படுத்தியது .'நல்ல பாடசாலையை தந்த கடவுள் எனக்கு
அங்கு நிம்மதியாக படிப்பை தொடர்வதற்கான
சூழலையும் ,உறவினர்களையும் தரவில்லையே 'என்று இப்போது
அழுதுக்கொண்டிருக்கும் ரம்மியா திடிரென்று எழுந்து தனது பெற்றோரிடம்
செல்கிறாள் .
'அப்பா ,நான் படிப்பை கைவிடப் போறன் '
'ஏன் ?என்ன சொல்ற ?அதுக்கிப்ப என்ன அவசியம் ?'
'வறுமைதான் .படிக்கிறதுக்கு நல்ல சூழ்நிலைமை வேணும் .அனால் அது
சித்தி
வீட்டுலயும் இல்ல . சித்திகிட்டையும் இல்ல .மேலதிக வகுப்பு
செலவு ,பாடசாலை தவனைக்கட்டணம் ,சித்தி வீட்டுக் கட்டணம் மொத்தமா
மாசம் 15000 ரூபா வேணும் .நம்ம குடும்ப சூழ்நிலைமைக்கு இது
முடியாத காரியம் .அப்பிடிதா இத எல்லாம் நீங்க கட்டினாலும் சித்தி
வீட்டுல வேலை செய்ரதுக்கே முழு நாளும் போய்டும் .படிக்க எங்க
நேரம்
இருக்கு ? அங்க வேற பாதுகாப்பான விடுதியும் கண்டு பிடிக்க கஷ்டம் .
கண்டுபிடிச்சாலும் இப்ப உடனே போய் சேர பணமும் இல்ல .அதுதான் இந்த
முடிவுக்கு வந்துட்டன் '
இதை கேட்ட அவளது பெற்ற்றோர் மனதில் இரத்தக்கண்ணீர்
வடித்தனர் .ரம்மியாவிற்கு அவர்கள் வருந்தி மொழிந்த வார்த்தைகள் ;
கஷ்டத்தின் மத்தியிலும் படிக்க வேண்டிய கட்டாயத்தை
வலியுறுத்தின .அவளும் நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட
புழுதியில் எறிவதோ என உணர்ந்தால் .தனது உள்ளம் நகரிற்கு செல்வதை
முற்றிலும் ஒதுக்கிவைத்துவிட்ட நிலையில் உணர்விழந்து போன
மரக்கட்டையாக நாளை நகரிற்கு செல்ல ஆயத்தமாகிறாள் .தனது
திறமை மூலமாவது படிப்பிற்கான பணத்தை சம்பாதிக்க முடிவு
செய்த அவள் அவளது கடந்த ஒரு வருட அனுபவங்களின் ஒரு பகுதியை
தொடர்கதையின் முதல் அத்தியாயமாய் எழுதி தனது வீட்டு
ஒழுங்கிலிருக்கும் பத்திரிக்கையாளரிடம் பத்திரிக்கையில் பிரசுரிக்க
விண்ணப்பிக்கிறாள் .பத்திரிகையாளர் ரம்மியாவிடம்,
"வாழ்த்துக்கள் ரம்மியா ,இது பிரசுரிக்க தகுதியானதா இருந்தால்
நிச்சயம் நீங்க அடுத்த அத்தியாயத்தை எழுதலாம் .ஆமாம் இந்த தொடர்
கதையோட தலைப்பு என்ன?'
"வறுமைக்கு நிறமில்லை"
'என்ன?எந்த அர்த்தத்தில் இந்த மாதிரி ஒரு தலைப்ப வச்சிங்க?'
'வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அவங்களோட நாள் பொழுதுல எந்த
நிறத்த பார்த்தாலும் அதா உள்வாங்கிக்கொள்ள முடியாது ,காரணம் அவங்க
கண்ணில் உள்ள வழியும் ,மன வேதனையும் அதை மறைத்துவிடும்'
பத்திரிகையாளரின் முகத்திலும் ஏதோ ஒரு தெளிவு.ரம்மியாவும் புதிய
முயற்சியில் இறங்கிய சற்று ஆறுதலடைந்த மனதுடன் வீட்டிற்கு
வந்து பாடப்புத்தகங்களை புரட்டுகிறாள்.