புருவகாலம் -1
அரசியல் வாதிகளின் சாதுர்யத்தால் ஒவ்வொரு நொடியிலும் பிரசவத்தின் வலியை அனுபவிக்கும் எங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் உபரி நீரில் அவசர அவசரமாய் விவசாயம்
விருப்பத்தை சுமந்துகொண்டு திரியும் விழல்படர்ந்த நாரை ஏரிக்கரையின் காட்டாமணி காட்டில்
கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு தேக்குமர நிழலே சொர்க்கமாய் கருதி ஏரிக்கரையின் ஈரத்தில் ஆங்காங்கே உதிர்ந்திருக்கும் இலைகளோடு அழுக்குபடிந்த அந்த எம் ஜி ஆர் வேஷ்டியை தலைக்கு சும்மாடாய் சுருட்டி வைத்துவிட்டு... கவலைகளோடு ஓய்வெடுக்கும்
என் ஒவ்வொரு முதிர்ந்த மக்களுக்கும் அந்த மக்களின் வம்சத்துக்கும் ....
எனக்கு முன்னோ பின்னோ பரபரப்பாய் இயங்கி கொண்டிருக்கும் என் ரத்தங்களுக்கும்... தெருவிளக்கின் ஆசிர்வாதத்தில் தான் எங்களின் பள்ளி கூட புத்தகமெல்லாம் பரந்துபட்ட சிந்தனையை வழங்கியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.?
அண்ணாவும் அம்பேத்கரும் எங்களுக்கு பரிச்சயமானது இப்படிதான். கக்கனும் காமராசனும் எங்களுக்கு அறிமுகமானது இப்படிதான். உலக சிந்தனையாளர்களின் பேச்சுக்கள் எல்லாம் இந்த வழியில்தான் விழிபரிக்கபட்ட எங்கள் காதுகளுக்கும் வந்து சேர்ந்தன.
ஆம், உலகின் 70% தெருக்கள் இப்படிதான் சமாதானம் பேசியபடி பயணிக்கின்றன ஒவ்வொரு நாளின் இருட்டிலும் என்பதை எங்களுக்கு நாங்களே அராய்ச்சி செய்து சொல்லிகொண்டோம்
ஒரு அந்திமகாலத்தில் .
எத்தனையோ மெய்ஞான அறிஞர்களும் இப்படிதான் தோன்றியிருக்கவும் கூடும் என்றும் நினைக்கிறேன். இருப்பினும், இறுமாப்பின் ரெக்கை கட்டி பயணிக்கும் உலகில் சிந்தனைகள் நம்மை சிதைத்து போடும் தருணமெல்லாம் இப்படிதான் கருணையில்லாமல் கைகளின் கிறுக்கலில் குழந்தையை பெற்றுப் போட்டுவிடுகிறது என் இதயம்.