மறந்து போனான்

என்னோடு முரண்பட்டவன்..
என்னை மேம்படுத்தியவன்..
எனக்காக கண்ணீர் சிந்தியவன்..
என் வளர்ச்சியில் மகிழ்ச்சி கொண்டவன்
மரணத்தின் வாசலில் ..
ஒரு மழை நாளின் அட்டகாசத்தில்
அமைதியாக கிடக்கிறான்..
விழிகள் எங்கோ குத்திட்ட படி
இன்னும் சாதிக்க வேண்டியதை எண்ணியபடி..
மரணத்தின் வாயிலாக நிரந்தர
மறதியை அணைத்தபடி..
எதையுமே விரைவாக ..சாதுரியமாக..
அறிவுபூர்வமாக..செய்தவன்..
விவேகமற்றுப் போனானோ
எமனுக்கு விருந்தாக..?
இன்னும் கொஞ்ச நேரத்தில்
சடலத்தை பெற்றுக் கொள்ளுங்கள்..
என்று ஒரு குரல் ஈனசுரத்தில் வெளி வர..
முதல் முறையாய்
நான் இறந்து போனேன்!
வெளியில் வந்தேன்
நடைப் பிணமாக!
(மறைந்த என் நண்பர் ..அறிவு ஜீவி..தொழிற்சங்கவாதி.. திரு ராமகிருஷ்ணன் நினைவாக..நினைவுக் காணிக்கையாக )