தெளிவில்லாத தேடல்கள்

எதிர்காலம் பற்றிய ஒரு கண்ணோட்டம்....
என் அறிவுக்குப் புலப்பட்ட வரையில்

டைனோசர்கள்
ஆட்டுக் குட்டிகளாக
வீட்டில் கட்டப் பட்டிருக்கும்......

மரங்கள்
முளைப்பதுபோல்
கிராபிக்ஸ் படங்கள் திரையிடப் படும்.....

அப்போதும்
செல்போனைப் பார்த்தபடி
மனிதர்கள் குனிந்தபடியே இருப்பார்கள்......!!

நிறைவைப் புரியாமல்
தொடர்ந்து கொண்டே இருக்கும் - ஒரு வித
தெளிவில்லாத தேடல்கள்.....

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (31-Jan-15, 11:34 pm)
பார்வை : 61

மேலே