இதயத்தை காவலிடு
விசிறியோ இயங்கவில்லை நின்
இமைகளை சிமிட்டி விடு
புத்தகம் தெகிட்டியது
புதுகவிதையை காட்டி கொடு
இலையுதிர் காலமிது என்னிடம்
உன் ரகசியம் காட்டி விடு
பனிவிழும் தருணமிது
வெப்பக்கடத்தியாய் மாறிவிடு
தொடுதிரை கணிணியோ நீ என்
விரல்களுக்கு ஆணை இடு
விடுபடும் நேரமிது வரும்வரை
என் இதயத்தை காவலிடு