மொழியா வலி

நான்
எழுதாத வரிகளுக்கு
மொழியாத வார்த்தைகள்
அர்த்தம்...
மீட்டாத வீணைகளில்
மெளன ராகம்
இசை...
நனைக்காத தூரிகையில்
வெண்ணிறம்
ஓவியம்...
தொடுக்காத மாலையில்
வெறும் நாறும்
மனம்...
ஒளித்து வைத்தேன்
மொழிய நினைத்ததை...
வலிக்கிகிறது

எழுதியவர் : கோட்டாறு ஷிபான் அரூஸி (1-Feb-15, 12:39 am)
பார்வை : 208

மேலே