ரயில் பயணம்
![](https://eluthu.com/images/loading.gif)
மஞ்சள் வெயில் மாலை நேரம்
சுகமாய் ஓர் ரயில் பயணம்
இது வேகமாய் செல்லும் ரயில் அல்லே ..
தாலாட்டு பாடும் கவிதை
மேகத்தினுள் ஒழிந்தே வெயிலும்
சுகமாய் வீசும் ஜன்னல் தென்றலும்
மலைகள் இடையே மறையும் சூரியனும்
தட தட என ரயில் பாடும் கானமும்
கொள்ளை அழகு...!
இயற்கை அழகை ரசித்த எனக்கு
இயற்கை தன் கைவண்ணம்
காண்பிக்க நினைத்தோ என்னவோ!
இமைகள் மூடி திறந்தேன்! மதி மயங்கினேன்!
சிலைகொரு ஆடையிட்டு வந்தவள்
நவீன உலகின் நங்கை அவள்!!!
என் ஜன்னலோரம் மறையும் சூரியனும்
என் எதிரில் முகம் மறைக்கும் சந்திரனும்
ஆகா இதுவல்லவோ அழகின் சங்கமம்!!
ரசிக்க தோன்றும் மாலை பொழுதும்
ரசித்துகொண்டே இருக்க தூண்டும் அவளின் அழகும்!
மலைகள் நடுவே ஓர் வெள்ளை அருவி போல்
அவள் நெடுங்கூந்தலில் மல்லிகை பூக்கள்...!
தென்றல் தழுவிய போது அதன் ஈரம் உரைக்கவில்லை!
அவளுடன் கண்கள் சந்தித்த போது
பார்வை என்னும் காதலின் சங்கீதத்தை
இமைகள் அசைக்காமல் இசைக்கும்
மௌன மொழி பெயர்த்தேன்!!!
நிஜங்கள் அனைத்தும் மனதில் நிலழலாக பதிந்தது!!
அவள் கண்களின் நிழல் படம் மட்டும்
என் மனதில் நிஜமாய் நிலைத்து நின்றது!!!
ஓயாமல் பேசும் என் இதழ்கள். . .!
அவள் ஓர பார்வையில் ஒய்ந்து போனது . . .!
அவளுடன் பேச நினைத்த எத்தனையோ வார்த்தைகள்
அவள் பார்வையின் சுகத்தினிலும்
புன்னகையின் எழில் மயக்கத்திலும்
என் மனதிற்குள்ளே தங்கி போனது...!
தூக்கமில்லா இரவை முடித்து
பார்த்து பார்த்து சோர்ந்து போன கண்களுடன்
காலை சூரியனை வரவேற்க தயாரான போது
வேகமாக கரையும் நொடிகளின் மீதான கோபத்திலும்
அவள் கண்களில் கண்ட சோகமும் சொல்லாமல்
சொன்னது பிரியும் வேளை வந்ததென...!
எங்கிருந்தோ வந்து என் இதயத்தை
கொள்ளை அடித்த அவள் எங்கு சென்றாள்
என்று தெரியாமல் நிற்கிறேன்!!
என் இதயத்தினை தொலைத்த இடத்தில் அவளை எதிர் பார்த்து!!!