என் வெண்பா இப்பெண்பா
![](https://eluthu.com/images/loading.gif)
..."" என் வெண்பா இப்பெண்பா ""...
உன்னை நாணாக்கி என்னை
அம்பாக்கி தமிழை துணையாக்கி
வெண்பா பாட்டிசைக்க இப்பெண்பா
பொருளாக்கி அன்பாய் கவியாக்கி
முழுதாய் அவள் உயிர்பெற்றாள் !!!
கருவின் உருதந்த கவிப்பொருளே
கவிஞன் நான் பைத்தியனாம்
மறுப்பில்லை உண்மைதான் நீ
கவியென்றால் உனைப்பாடும் நான்
பைத்தியமென்பதில் தவறில்லை !!!
இந்த நிகழுலகை மறந்து நான்
அந்த கனவுலகினில் கலந்து நீ
தென்றல் காற்றாய் எனைமெல்ல
தேகத்தை ஊடுருவி உரசுகின்றாய்
ஏனோ கண்ணுக்கு புலப்படாமல் !!!
எந்தன் காதலின் மிகுதியாலே
சேதிசொல்லவே அவள்வருவாள்
சேர்த்தணைத்து எனைகொள்வாள்
சிறு சேவகம் செய்திட ஆவலால்
நான் ஆனந்தமாய் காத்திருக்க !!!
கன்னியவள் கயல் கண்மையெழுதி
தகிக்கும் குளிர் தேகமதை தழுவி
சூடாக்கி எனையவள் சூடிக்கொள்ள
அவளது மாராப்பு துணியாய் நான்
மாறி வாகைசூட மாட்டேனோ !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...