உயிரை விட்டுவிடவா
விடியல் இல்லை இனிமேல்,
இருளோடு போய்விட்டது - இவள்
இளமையின் வெளிச்சம்...
அலையென கொதிக்கும்
அவன் நினைவுகளுடனே
அஸ்தமித்துவிட்டது இவள் இதயம்..!
'விட்டு விடு' என்று நான் புலம்ப
தொடர்ந்தாய் நீயும்
நமதான காதலுக்கு -ஆயிரம்
நியாயங்கள் கூறியே!
இன்று துணையின்றி யாசித்தேன்
உந்தன் அன்பை - எறிந்தாய்
நேசித்த நெஞ்சை ,இரண்டாய் பிளந்தாய்!
பிச்சை கேட்டு பிழைப்பது
மானத்துக்கு கேடாம் - அதைவிட
உயிரை விட்டு விடுவது மேலாம்...
உயிரை விட மேலாக,
உன்னை நேசித்த நானும் - இன்று
பிச்சை கேட்கும் நிலைமையில்!
சொல்லடா, உயிரை விட்டுவிடவா?