தோற்றுப் போகிறேன் உன்னிடம்
உன் அழகு
என்னை
திரும்பத் திரும்ப
பார்க்க வைக்கிறது !
உன் அன்பு
என்னை
திரும்பத் திரும்ப
நினைக்க வைக்கிறது !
உன் காதல்
என்னை
திரும்பத் திரும்ப
விழ வைக்கிறது !
அடியே நீ
தோற்கக் கூடாது
என்பதற்காகவே
நான் நாளும்
தோற்றுப் போகிறேன்
உன்னிடம்
* ஞானசித்தன்*
95000 68743