நெஞ்சம் பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி
எந்நேரமும் தண்ணீராய் காட்சியளித்த என் பூமி இன்று வறண்டு கிடக்க!
அதனால் பயனடைந்த விவசாயிகளின் நிலமும் இன்று மனை விற்கும் இடமாய் மாறி கிடக்க!
சுற்றி நின்ற மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு கிடக்க!
அந்த நிழலில் இளைப்பாறிய கால்நடைகள் எல்லாம் கசாப்புக் கடையில் இறைச்சியாய் கிடக்க!
இதனால் பயனுற்ற விவசாயிகள் அயல்நாட்டிற்கு கொத்தடிமையாய நடையைக் கட்ட!
இதை கண்ட என் நெஞ்சு பொறுமைக்கு மாறாக பொங்கி எழத் துடிக்குதய்யா!