காதல் நூல்கள்

கண்களை
உருட்டிப் பார்க்கும்
ஒவ்வொரு நொடியிலும்
திருட்டுப் போகுதடி இதயம்...
நீ
அழும்போதெல்லாம்
கோடிப் பூக்களும்
வாடிப் போகுதடி...
சின்ன
முத்தத்திற்காக
உன்னை
நாடி வரும்போதெல்லாம்
தேடிவந்து கடிக்குதடி
சிட்டெறும்பு...
நீயென்ன சர்க்கரைக்கட்டியா?
என்னவளே
என் இதயத்தைத்
தின்னவளே...
நாம்
நடந்துவரும் போது
கடந்துபோகும் அந்த
வீதிமரங்கள் தானடி
நம்ஜாதி...
பறவைகள் பேசும்
தாளங்கள் தானடி
கொட்டு மேளங்கள்...
நம்
காதலின்
காந்தருவத்திற்காக
அட்சதைப் பூக்களை
அள்ளி வீசிய
அந்தப்புங்க மரங்கள் தானடி
நமக்குத் தங்கமாய்க் கிடைத்த வரங்கள்...
மரங்கள்
நம் இரு
கரங்களைக் கோர்த்த
காதல் நூல்கள்...