ஆதலினால் காதல் செய்வீர் மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

ஓராயிரம் கவிதைகள்
தீராத உன் கண் மையால்
ஆறாக நான் படைப்பேன்
அல்லி விழி மூடாதே....
சேறாக இருந்த மனம்
கூறான கண்மணியால் பூ
நாறாகப் படைத்த
செல்ல விழி மூடாதே...
யாரும் காணாத பா(ன)ணம்
சாறாகப் பெருக்கி
வேரோடு எனைச் சாய்த்த
கள்ள விழி மூடாதே....
சேராத கணம்
மாறாக உனை மனதில்
தேராக படர்ந்திருக்கச்சொன்ன
பாரி விழி மூடாதே....
தாறுமாறான பொன் ஏறுகீறி வீணனும்
கம்பன் இராமனாய்க் கண்மணி கவிபாட
வீறு கொண்டெழுந்தேன்
ஆதலினால் காதல் செய்வீர்……