காதல்
தேன் பெற்ற மலரினத்து மங்கையவள்
வான் போற்றும் திருமேனி பவனி வர - நான்
கன்னக் குழியுடை ஓவியத்தை கண்டேன்
கன்னியவள் இவ்வையத் தழகு
விண்ணில வொளியுடை முகம் பெற்று
மண்ணிலம் அடிவைத்த கொடியிடையாள் - கண்டேன்
என் மனம் துள்ளல் மான் போலே
உன் விழி பின் போனதடி
ஆதவன் மறைத்திடும் வேளை காரிருள் சூழ்ந்திடும் மாலை
மாதவன் குழல் லொலி வந்து மயக்கத்தை தாருதம்மா - அவளிடம்
கண்டதும் காதல் கொண்டு என் உயிர் என்னை
உண்டு பசியினை போக்குதம்மா
முகிலதன் துகிலுறிக்க அவ்வேளை சிதறிய மழைத்
துகிள்தனில் அவள் முகம் பிறக்க - அகிலம்
காதல் தீ ஏற்றுதம்மா எரிகையில் இக்
காகிதம் பொசுங்குதம்மா