நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே...!
நெஞ்சு பொறுக்குதில்லையே மானுடா
நிந்தன் செயல்கண்டு.....!

மலிவாய் கிடைப்பது மது மட்டுமே
கல்வியை எங்கே காணோம்?
காசுக்கு விற்றுவிட்டு
கடிவாளம் போட்ட குதிரையாய் ஏன் ஓடுகிறாய்...!

நெஞ்சு பொறுக்குதில்லையே மானுடா
நிந்தன் செயல்கண்டு.....!

அவசர ஊர்திக்கிகூட வழிவிடாத
அவசர உலகம் எங்கே ஓடுகிறது?
உயிரினும் பெரிதா உந்தன் பணசெற்கை....!
உந்தன் உறவாய் இருந்தால் விட்டுடுவாயா....?

நெஞ்சு பொறுக்குதில்லையே மானுடா
நிந்தன் செயல்கண்டு.....!

உழைப்பவன் ஓடாய் தேய்கிறான்
ஒருநாளாய் என்னிபர்த்தாயா?
உண்பதை நிறுத்தினால்
உயிர் எங்கே போகும். மறந்துவிட்டாயா?

நெஞ்சு பொறுக்குதில்லையே மானுடா
நிந்தன் செயல்கண்டு.....!

காடுகளை எங்கே காணோம்?
மண்ணோடு மண்ணாய் மடித்துவிட்டு...!
விலைகொடுத்தா வாங்குவீர்
இயற்க்கைகற்றை. இன்றலஊம் இல்லையே விற்பவன்......!

நெஞ்சு பொறுக்குதில்லையே மானுடா
நிந்தன் செயல்கண்டு.....!

மாற்றம் விரும்பும் விவசாயி
அர.ருத்ராட்சம்

எழுதியவர் : அர.ருத்ராட்சம் (2-Feb-15, 2:27 pm)
பார்வை : 94

மேலே