முயன்று பார் நட்பே - உதயா
காட்டையும் நட்டு ஆளலாம்
...............காற்றையும் வெட்டி உண்ணலாம்
மலைகளையும் மண்ணாக்கலாம்
...............மண்களையும் கல்லாக்கலாம்
விண்ணையும் கிழித்துவிடலாம்
...............வானவில்லையும் முறித்துவிடலாம்
கார்முகிலைக் கூரையாக்கலாம்
...............மழைநீரில் மதிலமைக்கலாம்
பார்வையினைத் தீயாக்கி
...............பாவிகளைக் கானலாக்கலாம்
விதியினை அழித்துவிட்டு புது
............... விதியையும் உருவாக்கலாம்
ஊனத்திற்கு அனலிட்டு - பல
...............உலக சாதனைகளை நிகழ்த்திவிடலாம்
வாய் கண் செவி உதவின்றி - பல
...............வரலாறுகளை படைத்துவிடலாம்
கால் தொடரும் வேகத்தில்
...............கடல் மீதும் நடந்துவிடலாம்
அறிவின் கூர்மையைக்கொண்டு
...............ஆயுதங்களையும் அழித்துவிடலாம்
கனல் கொண்ட சூரியனை
...............பனித் துளியாக மாற்றிவிடலாம்
நீரில்லா பாலைவனத்தை
...............வற்றாத கடலாக்கலாம்
மண் கொண்டே கடல்மீது
...............மாளிகைக் கட்டிவிடலாம்
பஞ்சுக் கொண்டே காற்றின்மீது
...............கோட்டையைக் கட்டிவிடலாம்
புல்லினையும் எடுத்து
...............வில்லாக வளைத்துவிடலாம்
முல்லினையும் உருக்கி - அதில்
...............அம்பாக பொருத்திவிடலாம்
எரிமலையின் சீற்றலில்
...............சித்திரம் வரையிலாம்
இயற்கையின் சீற்றலில்
...............இசையினை அமைக்கலாம்
தடைகளை உடைத்து
...............மாலையாக அணியலாம்
பூக்களை உறிஞ்சியே
...............தேனினை உண்ணலாம்
அறிவினை நீராக்கி
...............ஆறாக ஓடலாம்
தேடலின் தொடக்கமென
...............கடலினை அடையலாம்
புவியினை பிளந்தே - அதில்
...............இருளினை புதைக்கலாம்
கனவினை விரித்தே - அதில்
...............துயிலினைச் சுடர்ராக்கலாம்