மனிதனுக்குப் பெயரும் உண்டோ -கார்த்திகா

வீதிக்கு விலை சொல்லும்
கூட்டத்தின் கண்களில்
தேவதை தேவை விளம்பரம்

பட்ட பகலில்
முக்காடிட வைக்கும்
பாழும் சமூகம்

அழிந்த காதலில்
எஞ்சிய எச்சங்களின்
கூற்றாய் வக்கிரப் பேச்சுக்கள்

எட்டி நடந்தால்
ஓரடி இழுத்து அறையத்
தூண்டுகிறது தன்மானம்

வருத்துகிறவர்களுக்கு எல்லாம்
பற்கள் பதம் பார்க்கப்படுமென்று
பத்திரிகை வைத்தல் முறையாகுமோ

சதை தின்னும்
கண்களுக்கு இரையாக்கிட
நீ கழுகில்லை
விலை ஒட்டிக்கொண்டு
வாழ்வதற்கு நாங்கள்
மரணிக்கவில்லை !
பிறந்திருக்கிறோம்!!

உங்களில் யாராவது
மனிதன் என்றால்
பின்னால் வராதீர்!
இணைந்து பார்!!

எழுதியவர் : கார்த்திகா AK (2-Feb-15, 5:58 pm)
பார்வை : 114

மேலே