நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் 2015-ரகு

அறிவைச் சுறுக்கி வாய்மை துறந்து
அழிவைப் பெருக்கிப் புதிராய் வாழும்
நெறிபிறழ் மனிதரை நினைந்து விட்டால்
நெஞ்சு பொறுக்கு தில்லையே!

கயவர் கூட்டம் கலவர ஆட்டம்
பாலியல் வன்மம் பாழுங் கொள்கை
தியதிகள் தோறும் தொடர்ந்து தெறிக்கத்
தேசஞ் சிறக்கு தில்லையே!

ஊழல் பொறியென விழுந்து கொளுந்து
உலகம் தூற்ற எரியுது நாட்டில்
பாழும் மனிதர் குளிகாய்ந் ததனைப்
போற்றுதல் குறையு தில்லையே!

வாழும் வாழ்க்கை வளம் பெறுமாயின்
வன்மம் என்ன வழிப்பறி என்ன
ஊழல் கொள்ளை கொலையது மென்ன
உவமைபேசித் திரியுதோர்க் கூட்டம்

நாளு முழைத்தும் உழுது களைத்தும்
நீளும் வறுமை நிலைக்குந் துயரில்
வாழு மேழையர் வஞ்சித் திருக்க
நெஞ்சு பொறுக்கு தில்லையே!
-----------------------------------------------
இக்கவிதை என்னால் எழுதப்பட்டது என
உறுதியளிக்கிறேன்
விலாசம்:அ.ரகு சுஜய் டிஜிட்டல்ஸ்
374,அவினாசி ரோடு பெரியார்காலனி
திருப்பூர் தமிழ்நாடு இந்தியா
அலைபேசி: 91 83447-34304

எழுதியவர் : அ.ரகு (2-Feb-15, 5:19 pm)
பார்வை : 88

மேலே