பதின் பருவம்
பாதியிதழில்
பதித்த
பதின் பருவத்து
பதிப்புகளின்
பாதச்சுவட்டுப்
பாதிப்பிலொருத்தி!
மீதி இதழொன்று
மீதமிருக்கென
மிடுக்காய்
மின்னலுடையுடுத்தி
மின்னுகிறாள்
மின்னலொருத்தி!
கொக்கென நிற்கும்
கொல்லென சிரிப்பிலேக்
கொய்யும்
கோப்பெருஞ்சோழர்களுக்காய் இக்
கோப்பெருந்தேவிகள்!
வரவினை நோக்கும்
விழி
வலைகளின்
விரிப்பில்
விரலிடை மீன்களாய்
வலியுடை ஆண்கள்!
நோக்கும் முன்
நோக்கத் துடிக்கும்
நோக்குடன்
நோட்டமிடும் அனிச்சை
நோக்கங்கள்!
அனைத்தும் அறிந்தும்
அச்சம் கொன்று
அறிவிக்க
அச்சப்படும்
அசடுக்காரர்கள்!
பட்டதெல்லாம்
பதின் பருவத்து
பகடைகளாய்...
பசுமரத்தாணியென
பகல் கனவுகளாய்!