திருமண எதிர்பார்ப்பும் யுத்தகளமும்

எதிர்பார்ப்புகள், வரன்பார்க்கும் யுத்தகளம் கண்டன!!

அன்பும், பண்பும் கண்ணீர்க் கூட்டணியோடும்
அழகும், ஆற்றலும் பிடிவாதத் துணையோடும்
தாய்-சேய் உருவங்களில் வாய்ப்போரிட்டன.

கண்ணீர் வெள்ளத்தில் பிடிவாதம் கரைந்தோடி
ஏமாற்றக் கரையோரம் முற்றுப்புள்ளி கண்டு
இல்லற நிதர்சனத்தை கேள்விக்குறியோடு துவங்கும்

எதிர்பார்ப்புகள், குறைகாணும் யுத்தகளம் காணும்!!

எழுதியவர் : சு.முத்துக்குமார் (2-Feb-15, 8:16 pm)
சேர்த்தது : சுமுத்துக்குமார்
பார்வை : 67

மேலே