என்ன இருக்கிறது உன்னிடம்

என் இதயத்தை
திருடினாய் நீ
என் இன்பத்தில்
குளித்தாய் நீ.
என் தேகத்தில்
படர்ந்தாய் நீ
என்னுள் தேனாய்
இனித்தாய் நீ..
கல்லறைவரை நீதான்
என்று கற்பனை பல
நான் கண்டு...உன்
நினைவில் நானே.
என்னை மறந்து
புரியாத புதிராய்
என்னுள் நீ மட்டும்
இருக்கிறாயே.
அப்படி என்ன தான்
இருக்கிறது உன்னிடம்
சொல்லி விடு
என்னிடம் என்னவளே.