ஆதலால் காதல் செய்வீர் மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
மரங்களே இல்லாத ஊரில்
மழை வேண்டி பிரார்த்தனை ...!
மரங்களை சாலையின் குறுக்கே போட்டு
காலி குடங்களுடன் தண்ணீர் வேண்டி போராட்டம் ...!
ஆற்றுமணலை அள்ளி சென்று
அடுக்கடுக்காய் கட்டிய மாடி இடிந்த பின் போராட்டம் ..!
மரங்களை அழித்து கொண்டிருந்தால்
பிரார்த்தனையும் ,போராட்டங்களும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் ..
மரங்களை வளர்த்து
மண்ணையும் ,மனிதனையும் காப்பாற்றுவோம் ...!