என்னை விட்டுவிடுங்கள்

என்னை விட்டு விடுங்கள்
ஆம் நான் அறிவேன்
நான் ஒரு சமூகவிலங்கு

காலை முதல் மாலை வரை
வேலையற்ற வீணர்களால்
உற்று நோக்கபடுபவன் நான்

கறை பட்ட தன் வேட்டியை
பார்க்காது
குறை கூற காத்திருப்போரால்
உற்று நோக்கபடுபவன் நான்

ஆயிரம் கற்பனைகள் இருந்தும்
அடக்கி வைத்து வாழ்பவன் நான்

ஆசைகள் அதிகம்
கல்வியில் கடைநிலை நான்
ஆனால் இதுவரை
ஆடித்தோற்றதில்லை
மட்டை தட்டலில்
தினம் தினம் தோற்கிறேன்
உங்களின் மட்டம் தட்டலில்

ஆம் எதிர்வீட்டு பையன்
கணிதத்தில் நூறு தான்
நான் அந்த பள்ளி
வளாகத்தில் அடித்ததும் நூறுதான்

அவன் திறமைசாலி காரணம்
சமூகத்தின் எதிர்பார்ப்பு
குறுகி உள்ளதால்

ஆம் காதல் உள்ளவன்தான்
காலத்தை சற்றே முன்னோக்கி
செலுத்தும் திறன் இருந்தால்
தங்களை பற்றி காட்டியிருப்பேனே
இதை தவறு என சொல்லும் வாய்களின் மன்மத லீலைகளை

நீங்கள் கைத்தட்டி விசில்
அடிக்காதிருந்திருந்தால்
கூறுங்கள் திரையரங்கில் அது வெற்றிப்படம்
எனக்கு வந்தால் நான் ஒரு
வெற்றுக்குடம் அப்படித்தானே

ஆம் நான் வேலை அற்று அலைபவன் தான்
திறமையை வளர்க்காது
மதிப்பெண் வளர்க்க பாடுபட்ட
உங்களால் நான் இன்று
தண்டச்சோறு தான்

ஐயோ என்னை விட்டு விடுங்கள்
நான் தாங்கள் எண்ணும் அறிவாளியில்லை
நான் தாங்கள் எண்ணும் திறமைசாலியில்லை
நான் தங்களுக்கு தெரிந்த அந்த
எதிர்வீட்டு பையனில்லை
நான் நீங்கள் தெரிந்துவைத்துள்ள
ஒரே உதாரண கலாமில்லை

நான் வேறுபட்டவன்
நான் எனக்கு தெரிந்ததில் அறிவாளி
நான் எனக்கு வந்ததில் திறமைசாலி
நான் அந்த எதிர்வீட்டு பையனின் எதிர்வீடு
எனக்கு தெரிந்த உதாரணம்
சச்சின்
விட்டுவிடுங்கள் என்னை
நான் நானாக வாழ
விட்டுவிடுங்கள் என்னை

எழுதியவர் : கவியரசன் (4-Feb-15, 8:40 am)
Tanglish : ennai vittuvidungal
பார்வை : 116

மேலே