ஆதலினால் காதல் செய்வீர் - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

வறுமையினால், கொடுமைகளால் பிறர் வாடுதல் காணல் வேண்டும்
வாடிய பயிர்களை கண்டு வாடிடவே வள்ளலாக காதல் வேண்டும்
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி மனம் உருகுதல் வேண்டும்
உருகியபின் பிறர்க்கு உதவிடும் உறுதுணை ஆதல் வேண்டும்
உறுதுணையாய் இருப்பதிலே மாறாத உறுதி காத்தல் வேண்டும்
காதலினால் மனிதம் உயர்ந்திடல் வேண்டும் ..
காதலினால் மனிதநேயம் மலர்ந்திடல் வேண்டும்
காதலினால் கலகங்கள் மறைந்திடல் வேண்டும்
காதலினால் இனக்கொடுமைகள் ஒழிந்திடல் வேண்டும்
காதலினால் காம குரோதங்கள் அழித்திடல் வேண்டும்
காதலினால் மொழிகள் பல கற்றிடல் வேண்டும்..
காதலினால் தாய்த்தமிழை வளர்த்திடல் வேண்டும்
காதலினால் போரில்லா உலகம் அமைத்திடல் வேண்டும்
காதலினால் மாசில்லா சுற்றுச்சூழல் காத்திடல் வேண்டும்..
காதலினால் சந்ததிகள் வளம்பெறும் வகை வாழ்தல் வேண்டும்..
ஆதலினால் காதல் செய்வீர்.. அன்பு கொள்வீர்..அகிலத்தோரே!
---------------------
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி :
ச.கருணாநிதி, வயது: 53 ,
16,சுந்தர மேஸ்திரி வீதி, குயவர்பாளையம்,புதுச்சேரி
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 94433 03407