நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுற வேண்டும் போட்டிக் கவிதை

உலைகொதிக்கும் வழியடைத்து
விளை நிலங்களெல்லாம்
நெல்லுக்கு பதிலாக
கல்கட்டிடங்களை விளைவிக்க
உயிருடல்கள் வதைபடும்
நிலைவருவதை நினைக்கையிலே!

கூடி குதூகளித்து மகிழ
கூடிருந்தும் குடியிருந்தும்
கழிவுகளை தேடியோடி
காக்கும் மானமதையிழக்கும்
மனங்களை நினைக்கையிலே!

பாழாய்போன
புகழுக்காக பணத்துக்காக
கொத்துக் கொத்தாய்
கொலைகள் செய்யும்
கொடூரங்களை காண்கையிலே!

உடலிச்சையை தீர்க்க
ஓடியாடும் பச்சிளம் பாலகரை
பாலியல் வன்முறைக்கிரையாக்கும்
பாதகரை நினைக்கையிலே!

நெஞ்சு பொறுக்குதில்லையே
கொஞ்சமும் பொருப்பில்லா
இந்த நிலைகெட்ட மானிட[மூட]ர்களை
நினைக்கையிலே
நெஞ்சு பொறுக்குதில்லையே!..

எழுதியவர் : அன்புடன் மலிக்கா (4-Feb-15, 9:45 am)
பார்வை : 90

மேலே