வறுமை

வறுமை தீவிலே
வாழும் நாங்கள்
தரையிலே துடிக்கும்
நீர் இல்லா மீன்கள்.
பஞ்சத்தின் அளவு
எங்கள் உடல் காட்டும்.
பசியின் கொடுமை
தீ என வாட்டும்.
பெற்றவள் மனது எப்படி வலிக்குமோ?
என் பாரதியின் கனவு எப்பொழுது பலிக்குமோ?

எழுதியவர் : கு.தமயந்தி. (4-Feb-15, 12:54 pm)
Tanglish : varumai
பார்வை : 227

மேலே