நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி
தணல் கட்டையின் அணலும்
இரத்த நாளங்களின் துடிதுடிப்பும்
வேல் பாய்ச்சும் இன்றைய யதார்த்தங்களும்
ஐயோ என் நெஞ்சு பொறுக்குதில்லையே
தமிழ் வாயில் நுழையாத தமிழன்
பச்சைத்தமிழனை நகையாடுகிறான்
தன்னில் அந்நிய மொழியினை
உயரமாய் எண்ணிக்கொண்டு
வறுமையின் அகோரப்பக்கங்களின்
யதார்த்த மனிதர்களின்
கல்வியென்னும் அஸ்த்திரத்தை
பணத்தால் பிடுங்கி வைக்கும் முட்டுக்கட்டைகள்
வீதியில் நடக்கும் அசம்பாவிதங்கள்
அதிகார துஷ்ப்பிரயோகங்கள்
ஓங்கும் பெண்ணடிமைத்தனங்கள்
புயலை உருவகிக்கும் சமுகப்பிணைப்புகள்
எத்தனை,எத்தனையோ ஏராளமாக
ஐயோ! என் செய்வேன் நான்
தோழர்களே தேடல்களில் பிரவேசிப்போம்-வலிமையுடன்
தீங்காத தொல்லைகளை விட்டொழிப்போம்!
(இது எனது சொந்தப்படைப்பாகும்)