அழகாக்கி கொள்ளடி உன் மணவாழ்க்கையை 555

அழகே...

விண்மீன் விழி அழகு
வெண்ணிலா முகம் அழகு...

முத்து போல் பற்கள் அழகு
கேள்விகுறிபோல் செவி அழகு...

கிளிகொத்தும் நாசி அழகு
மாங்கனி கன்னம் அழகு...

சங்கான கழுத்து அழகு
உடுக்கையான குறுக்கு அழகு...

வாழைத்தண்டு கால்கள் அழகு
வெள்ளிகொலுசு அணிந்த பாதம் அழகு...

பால் போன்ற தேகம் அழகு
மயில் தோகைபோல கூந்தல் அழகு...

வெண்டையான விரல் அழகு
வெள்ளரியான கைகள் அழகு...

சுண்டி இழுக்கும் பார்வை அழகு
சுகமான குரல் அழகு...

மின்னலென இருக்கும் வகிடு அழகு
விழியோரம் மச்சம் அழகு...

செம்பருத்தி இதழ் அழகு
கோபபட்டா இன்னும் அழகு...

உருண்டு திரண்ட மார்பழகு
பெண்களில் நீ அழகு...

அழகின் மொத்த
ஓவியம் நீ...

அதில் தவறி விழுந்த ஒற்றை
தூரிகை நான்...

உன்னை மணந்து கொள்ள
எண்ணம் எனக்கு...

என்னை மணந்து கொள்ள
எண்ணம் இல்லை உனக்கு...

கண்களால் காதல் வலை
வீசியவளே...

கல்யாணத்திற்கு
போடுகிறாய் தடை...

அழகில் சிறந்தவளே...

அழகாக்கி கொள்ளடி
உன் மணவாழ்க்கையை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Feb-15, 4:51 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 250

மேலே