உயிர் அறுக்காதீர்

விதையாய் விழுந்து
மூடிய மண்ணை - மேல்
முட்டி முட்டி -மறுபுறம்
தரை துளைத்து
வேர் விடுத்து
குருத்தாய் தலை நீட்டி
இலை விட்டு
சூரிய ஒளி
உள்வாங்கி -அதனுடன்
நீரை சேர்த்து
கணு கணுவாய் வளர்ந்து
கிளை பரப்பி
மழையிலும் புயலிலும்
உயிரினை கையில் பிடித்து
வெயில் காலத்தில் நாவறண்டு
உந்தன் பிள்ளை விளையாட ஊஞ்சலாகி
அவனுக்கு யாருமில்லா நேரங்களில் தோழனாகி
உன் பசி தீர்க்க காயாகி கனியாகி
நீ கலைத்து படுக்கையிலே
உனக்கு நிழலாகி
மரமாய் நின்ற என்னை
உயிர் அறுத்து கொள்ளும்
மனிதா!
உன் மனம் மரத்து போனதோ!
நீ வெட்டி சாய்ப்பது
என் வேர்களை மட்டுமல்ல
உன் மனித சமுதாயத்தின் உயிர்களையும்தான்!
நீ அறுத்து சாய்ப்பது என்னை மட்டுமல்ல
நாளைய உன் தலைமுறைகளின்
தலையையுந்தான்.

எழுதியவர் : சங்கீதா பிரியா (4-Feb-15, 7:40 pm)
பார்வை : 96

மேலே