வருவேன் உன்னோடு மண்ணாக
நானும் சிகரெட்டும்:
உதடுகளுடன் உறவாடி
உறவாடியதில் நிறம்மாறி..
உயிர்க்காற்றுடன் உள்வாங்கி
உள்வாங்கியது படிந்தாகி..
விரலிடுக்கில் விளையாடி
விளையாடியது வினையாகி..
சாம்பலாக உருமாறி
உருமாறியது நஞ்சாகி..
விழுந்தாயே என் காலில்
தரையோடு நீ தேய..
நீ தேய்வதை நான் ரசிக்க
நான் ஓய்வதை நீ ரசிக்க..
பிரிவேது நண்பா உன்னோடு
வருவேன் உன்னுடன் மண்ணாக!!