மெழுகுவர்த்தி

மின்சாரமில்லா
எங்கள் வீட்டில்
உள்ளத்தை
உடலாய் மாற்றி...

வேதனையை
சுடராய் ஏற்றி ...

குடும்ப
கஷ்டத்தை
கண்ணீராய் ஊற்றி...

என்னோடு
இரவில்
இணைந்து படிக்கும்
இரண்டாவது தம்பி
இறந்துகொண்டே
இருக்கிறான்...

உருகி! உருகி!





**************************************

12 வருடங்கள்
என் வீட்டில்
'சூரியன் ' ஆகினாய் .....

வேலைக்குப் போய்க்கொண்டே
படித்துமுடித்த பிறகு....

"வெறும் 923 மதிப்பெண்
என்று வெறுப்பு அடைந்தது மனது"

"இன்னுமே
நீ உருகிகிட்டே இருந்தாலும்
என் வேதனை மட்டும்
எரிந்து கொண்டே ........"

எழுதியவர் : திருமூர்த்தி. v (4-Feb-15, 9:43 pm)
சேர்த்தது : திருமூர்த்தி
Tanglish : mezhuguvarthi
பார்வை : 310

மேலே