கண்ணீர் கோலங்கள்

உச்சி வெயில்
ஊசலாடும் தென்னோலைகளை
பாதி வயல் தீர்ந்துவிட,
சேற்றுக் கையோடு சோர்ந்து நின்றாள்.
வெடித்த பருத்தியின் நிழலில் ,
சோற்று போசி .
வாய்க்கால் தண்ணீரில்,
வாய்கழுவி வரப்போர
வாழைமரத்தை பார்த்தாள்
குலைதள்ளியிருந்தது
தாயம்மா ! -குரல்
ரெண்டு தேக்கந்தலை ஓடி ?
மௌனத்தால் சம்மதம் சொல்லி
மெல்ல பொலியேறினால்
பறிக்க ,
தேக்கமரத்திற்கு -
அவள் விழிகள் விரிசலடைந்தன
வெடுத்தலாய் கொடி கூட்டில் ,
இரு பூழுதிக் குஞ்சுகள்
பூரித்தாள்
என்னாச்சு சீக்கிரம் வா!
திரும்பினாள்,
வேப்பமரத்திற்கு
இந்தா தாயி - சீம்பால்
கவுண்டர் வீட்டு மாடு
கன்னு போட்டுது,
பழைய சோற்று ஓடு
பால் சோற்றை உண்டாள்.
அவள் பார்வையில் ஈரம் !
பொழுது சாயும் நேரம்
வண்டித் தடத்தில் -
பொடி நடந்தாள்
ஏம் புள்ல இப்படி கஷ்டப்படற
ஆ -
கருவேலாம் முள்
காலை சிவப்பாகியது,
நடந்தாள்.
பனையோலைக் கதவு திறந்திருக்க ,
இராந்திரை விளக்கு ,
பாதி வெளிச்சத்தில் - மங்கிய முகம் .
எங்கேடி கூலி பணம் ?
பிடிங்கி சென்றான் முன்னவன் .
எட்டி உதைத்தான் பின்னவன் .
கரையாமல் நின்றது
நெஞ்சில் - அவளிட்ட
கண்ணீர்க் கோலங்கள்
தாயம்மா !
இல்லை -
தாயாகப்போகும் தாயம்மா !

எழுதியவர் : விவேகா ராஜீ (4-Feb-15, 10:39 pm)
சேர்த்தது : விவேகா ராஜீ
பார்வை : 111

மேலே