நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் -மண் பயனுறவேண்டும் போட்டிக்கவிதை

நம்மின மக்கள் பயனுற நல்லதொரு
நம்பிக்கை வாழ்வுக்கு தந்தே உரமிடு !
வீடெங்கும் நல்ல மரம்நடு! மண்செழித்து !
ஓங்கட்டும் வல்லமை நாடு !!

தெருவெங்கும் தூய்மை யாகி வளமாகி !!
நாளைய சந்ததி நன்றாகி வாழ
இருப்பதை கொண்டு வளமாக்கி ஈடுசெய்து!
இல்லையெனும் சொற்புலம்பல் விடு !

இருப்பதை கொண்டு வளமாக வாழ்வோம் !!
சுரண்டல் தவிர்த்திட நீயும் சுதியேத்து
மண்ணும் செழிப்புற நாட்டு நதியிணைத்து
நாட்டின் ஒருமைபாட்டை நீட்டு !!

வாழும் வறுமை யொழித்து வெளியேற்று!!
வாழ்வின் தேவைக்கு வெளி நாடு !
வளர்த்திட வேண்டாம் வெளிநாட்டை நீயும்
சுதேசம் துறந்தபின்னே துபாட்டு !

சிந்திய ரத்தத்தை நெஞ்சில் நிறுத்து
பெற்ற சுதந்திரம் கிடைத்த வலியுணர்ந்து
உற்ற சுதந்திரத்தை பேணிகாத்து மூவர்ண
கொடியை தினமும் போற்று !!

எழுதியவர் : கனகரத்தினம் (4-Feb-15, 9:14 pm)
பார்வை : 240

மேலே