ஆதலால் காதல் செய்வீர்- மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

பரந்து விரிந்த பூமியிலே
பனிக்கண்டம் உருகி
பாழாய்ப் போய்க்கொண்டிருக்கும் வேளையிலே,

கொஞ்சு தமிழ் பேசும்
பிள்ளை முகம் மறந்து,
கட்டியவளின் காதலை மறுத்து,
காசு தேடி ஓடுவோரே,,!!

சின்னதொரு காரணத்திற்கே
பொல்லாத வார்த்தைகளினால்
உறவுகளை தள்ளிவைத்தோரே,,!!

இதுதான் நவீனம் என்று
அருகில் இருப்போரை மறந்து,
கணிணி வழியே கைவிரலால் பேசுவோரே,,!!

போதும் இந்த பொய்மை..

வாழ்க்கையே கொஞ்சம்-அதில்
வசந்தம் கொஞ்சத்தில் கொஞ்சம்!
காதல் மட்டுமே நெஞ்சத்தில் மிஞ்சும்!

ஆதலால் காதல் செய்வீர்...!!!

எழுதியவர் : கௌரி குமார் (5-Feb-15, 1:25 pm)
பார்வை : 47

மேலே