பத்திரிகை ஆயுதம்

..."" பத்திரிகை ஆயுதம் ""...

விழிப்புணர்வு நாலேடாம்
சுதந்திரமென்றே சொல்லும்
அதிகாரத்தின் அடிமைகள்
அன்றாட நடைமுறைகள்
அரசியலின் அணிகலன்கள்
அறியாமையை முதலேடுத்து
ஆன்மிகம் சொல்லிக்கொண்டே !!!

ஆன்மாவை கொன்றொடுக்கும்
இணையதளம் வந்தபின்னும்
இதன் மதிப்பு குறையவில்லை
ஈசலின் வாழ்வென்றாலும்
ஈட்டிபோல் காயங்கள்தரும்
உள்ளமென்பது இல்லாமலே
உள்ளதை இல்லையென்றே !!!

ஊருமுழுக்க பரப்பிவந்தே
ஊளையிடும் காகித நரி
எழுத்துரிமையென்று சொல்லி
எழுத்துக்கள் சுமந்துவரும்
ஏவுகணை ஆயுதமாய்
ஏவலரின் கூலிப்படை !!!

ஐயங்கள் இருப்பதை நம்
ஐக்கியத்தை உடைத்தெறியும்
ஒன்றை இரண்டாக்கி
ஒற்றுமையை கொலைசெய்யும்
ஒளவையின் சொல்லுமில்லை
ஒளடதமாகவும் இருப்பதில்லை
அஃதே பத்திரிக்கை தர்மமென்பார் !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (5-Feb-15, 2:02 pm)
Tanglish : pathirikai aayutham
பார்வை : 741

மேலே