மனிதாபிமானம்

ஞாயிற்று கிழமை கொழும்பு புறக்கோட்டைக்கு சென்ற போது கண்ட காட்சி.

ஜோடி ஜோடியாய் வரும் இளைஞர் யுவதிகள் ரூபா 1000, 1500 க்கு அதிர்ஷ்டலாப சீட்டு வங்கி கைவிரித்துகொண்டு செல்கிறார்கள். அந்த இடத்துக்கு சுமார் 100 m தள்ளி ஒரு வயது முதிர்ந்த பெண் மாற்று திறனாளி ஒருவர் (வயது எப்பிடியும் 60, 70 இருக்கும்) உதவி கேட்டு உட்கார்ந்திருக்கிறார். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அதிர்ஷ்டலாப சீட்டுகாரனுக்கு வாரி கொடுத்த கைகள் இவருக்கு எதையுமே கொடுக்காமல் பரிதாபத்தை மட்டும் முக பாவனையில் காட்டி செல்கிறார்கள்.

அளவுக்கதிகமாக ஆசைப்பட்டு வாரி வழங்கும் மக்கள்ஸ் ஏனோ வாழ ஆசைப்படும் ஒருவருக்கு சிறு தொகை கொடுக்க தயங்குகிறார்கள்.

என்ன மாதிரியான உலகத்தில் வாழுகிறோம்

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (5-Feb-15, 9:37 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 121

மேலே