+நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் ‍- மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி+

சுத்தப்படுத்துவோம்
முடியாத சாக்கடையை அல்ல‌
முடிந்த அரசியலை

கை கொடுப்போம்
பாசமுள்ள நண்பனுக்கு அல்ல‌
கோபம் கொண்ட எதிரிக்கு

முன்னேற்றுவோம்
மென்மேலும் பணம் சேர்ப்பவனைய‌ல்ல‌
வறுமையில் வாடும் ஏழையை

வழி நடத்துவோம்
புத்திசாலி இளைஞர்களை அல்ல
தடம் மாறும் ஊழியர்களை

விண்ணை எட்டுவோம்
செயற்கைக்கோளால் மட்டுமல்ல‌
நம் மூளையாலும்

வளர்த்திடுவோம்
நம்மை மட்டும் அல்ல‌
நம் நாட்டையே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Feb-15, 10:39 pm)
பார்வை : 2117

மேலே