ஒரு காதல் இரு துருவம் -சந்தோஷ்
” என்னை விட்டு போயிடாதே ஷீபா.......” அப்படின்னு கண்ணீர் தெளித்து அவள் மடியில் தலைச்சாய்த்து கதறவேண்டும் என்றுதான் ஏங்கினான் ஜான், கிரைம் பிராஞ்ச் போலீஸ்.
காதல் என்பதன் புனிதம் திருமணத்தில் முடிவது மட்டுமல்ல , காதலிக்கப்பட்டவள் ஒரு நாளில், புரிதல் இடைவெளியில் “ நீ யாரோ.. நான் யாரோ.. என்னை மறந்திடு “ இந்த ஒற்றை வசனத்தை சற்றும் எதிர்பாரா நேரத்தில் சொற்களால் வீசிடும் போது, ஒரு மில்லி நொடியில் இதயமே நொறுங்கினாலும்.. அவள் பின்னால் ஒடி கெஞ்சிட நினைக்கும் அந்த நொடி.. அந்த மனம் வெடிப்பு.. அந்த அலறல்.. அந்த வலி... அந்த மரணம்... அந்த முட்டாள்தனம்............. இவற்றிலும் உணரமுடியும் காதலின் புனிதம்.
ஜானின் மனநிலையும் இப்போது இப்படித்தான். இவனின் போலீஸ் கெளரவம் அவள் பின்னால் ஓட விடவில்லை. அவளிடம் கதறவும் அனுமதிக்கவில்லை. இவனை விட்டு வெகுத்தூரம் அவள் செல்லும் வரை வரும் அழுகையை பொத்திவைத்தவன் ..அவள், இவன் கண்ணிலிருந்து மறைந்ததும் காட்டாற்று கண்ணீர் இதய அணையை உடைத்து , விழிதிரையை கிழித்து வெளியேறியது. காக்கி சட்டை முழுவதும் ஈரம். காதல் ஈரம்.. ஷீபா என்கிற ஒரு பெண் மீதான மோகம் மட்டுமல்ல.. அவளே... அவளே தான் தன் வாழ்க்கை துணை என்று தீர்மானித்து வைத்திருந்தவனின் கனவுக்கோட்டை சிதறிய கொடூரம்.
பிறக்கப்போகும் குழந்தை. அதற்கு வைத்த பெயர் , வளரப்போகும் காதல்.. வரப்போகும் திருமண நாள். வாழ்த்தப்போகும் நண்பர்களின் உற்சாகம், பெற்றவர்களின் பூரிப்பு, நல்லவர்களின் சந்தோஷ திகைப்பு... இவையாவும் நொறுங்கிய தருணம். விட்டுப்போனது ஷீபா என்கிற காதலி மட்டுமல்ல. ஜான் என்கிற கெளரவமான கம்பீரமான போலீஸ்காரனின் வண்ண கனவுகளும், கட்டிவைத்த இலட்சிய கோட்டையும் தான்.
“ சார்.. என்ன சார்... ஒரு பொண்ணுக்காக இப்படி .. நீங்க அழுவது நல்லாவா இருக்கு ? உங்க அழகுக்கும் கம்பீரத்திற்கும் ஆயிரம் பேர் கிடைப்பாங்க சார் “ ஜானின் ஜீப் டிரைவரும் காவலருமான மகேஷ்.
“மகேஷ்... ஆயிரம் பேர் கிடைக்கலாம். ஷீபா கிடைப்பாளா.. அவ மேல...... அவ மேல............ அவமேல பயங்கரமா கோபம் வருது மகேஷ்.. நிறைய நிறைய பொய் பேசுறான்னு தோணிச்சு மகேஷ்.. கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு சொன்னவ தீடீர் தீடீர் ந்னு முடிவு மாத்துறா. என்னை ஏமாத்துறான்னு தோணிச்சு.. இதுதான் காரணமுன்னு சொல்லாமலே என்ன என்ன வோ பேசுறா.... மகேஷ். வெறுத்திடுச்சு ..! , அதான் நான் தான் போலீஸ் திமிருல பேசிட்டேன். அதுக்கு ...அதுக்கு
’ என் ப்ரெண்ட்சிப் கூட வேண்டமாம்.... போடி போடி பெரிய இவளா நீ............. ’ ரொம்ப திமிரு மகேஷ் அவளுக்கு.. அதான்.. அவ முன்னாடி ஒரு ரியாக்ஷனும் காட்டல.. போகட்டும்.. போகட்டும். இதோடு 5 தடவை எனக்கும் அவளுக்கும் பிரச்சினை வந்திடுச்சி...........ஆனா ஆனா அவ குழந்தை மகேஷ்.எதோ ஒரு சூழ்நிலையில என்னை வேண்டாமுன்னு நினைக்கிறான்னும் தோணுது. அவ பாவம் மகேஷ்.. சின்ன பொண்ணு என்ன பண்ணுவா ? .”
“ அய்யோ என்ன சார் நீங்க ? அந்த பொண்ண புரிஞ்சமாதிரியும் பேசுறீங்க அப்புறம் மாத்தி மாத்தி புலம்பி தள்ளுறீங்க.. அந்த பொண்ணு மேல கோவமுன்னு சொல்றீங்க. ஆனா பாவமுன்னு சொல்றீங்க.. விட்டுதொலைங்க சார் .. போலீஸ் நமக்கு திமிரு இருக்கனும். காதலுக்காக ஆம்பள நாம அழுதுட்டு இருந்தா .. உலகமே சிரிக்கும் சார்.. “
“ மகேஷ்.. ஆம்பிள அழக்கூடாதுன்னு எவன் சொன்னான். ? உணர்ச்சி எல்லாத்துக்கும் எல்லாருக்கும் ஒன்னுதான். நெருப்பு பட்டா ஆம்பிளைக்கு சுடாதா.. ? ஒகே மகேஷ். இப்போ பாருங்க அழுதுட்டேன். மைண்ட் ரிலாக்ஸ்... வாங்க போகலாம்.. அந்த ரேப்பிங் மர்டர் கேஸ்ல மாட்டின கபாலியை தேடுவோம் . என்கெளவுண்டர் ஆர்டரும் இருக்கு... எடுங்க வண்டியை ” .
போலீஸ் காரில் செல்லும்போது.
“சார் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க . ஷீபா மேல இவ்வளவு லவ் இருக்கே.. அவங்க உங்க ப்ரெண்ட்சிப் கூட வேண்டாமுன்னு சொல்லும் போது, பந்தாவா நிக்கமா.. அந்த பொண்ணுக்கு முன்னாடியே அழுது நீங்க பேசியிருந்தா மனசு மாறியிருப்பாங்க ல......”
“ இல்ல மகேஷ்.. அவ மேல நான் வச்சிருந்த அன்பு... அவ என்கிட்ட காட்டின அன்பு. இத எல்லாட்டியும் தாண்டி.. நாங்க கல்யாணம் பண்ணிப்போறாமுன்னு நம்ம டிபார்ட்மெண்டு க்கு சொல்லிட்டு இருக்கேன். இது அவகிட்ட கேட்டுத்தானே சொன்னேன். எங்க வீட்டுலயும் சம்மதம் வாங்கியாச்சு. ஆனா அவ இதப்பத்தி ஒரு செகண்ட் கூட யோசிக்காம... ’என்னை விட்டுவிடுடா . எனக்கும் உனக்கும் ஒத்துவராது’ ன்னு சொல்லிட்டு போறா.. அவகிட்ட என் கெத் விட்டு என்னத்த பேசி எப்படி கெஞ்ச முடியும் ,, ? ம்ம்ம்ம் ..
மகேஷ் அவளுக்கு என்கிட்ட பிடிச்சதே என் பந்தா தான்.. அவகிட்ட எனக்கு பிடிச்சதே அந்த திமிருதான். .. அவள காதலிக்கிறேன். அவள ரொம்ப பிடிக்கும் .... ஆனா, அவளோடு இந்த தடுமாற்ற குணத்தில பண்ணின துரோகம்...........மன்னிக்க முடியாது. . அவ தான் தன்னோட மருமகள்ன்னு நினைச்சிட்டு இருக்கிற என் அப்பா அம்மாக்கும் தானே துரோகம் செஞ்சிருக்கா...அது அவளுக்கு புரிஞ்சுதான்னு கூட தெரியல.. புரியவைக்க கூடிய வயசில அவ இல்ல. இப்போ நான் வீட்டுக்கு போயி என் அம்மாகிட்ட என்ன பதில் சொல்றதுன்னு தெரியல மகேஷ்.... ஆனா மகேஷ்.. அவ எனக்கு ஒரு குழந்தைதான்...! குழந்தை பண்ற தப்பு எல்லாத்தையும் மன்னிச்சா, அதுவே எல்லாத்துக்கும் தப்பாயிடும்.
நான் இப்போ புலம்புற மாதிரி ..அவ இப்போ புலம்பிட்டு இருக்கமாட்டா.. ! எனக்கு தெரியும். அவ இந்நேரம் குப்புற படுத்துட்டு கண்ணீரை சிந்தி தலைக்காணியை நனைச்சிட்டு இருப்பா , இல்லன்னா ,கவிதை எழுதிட்டு இருப்பா.. அவள நான் புரிஞ்சிகிட்டேன். அதானலதான் அவள போக விட்டேன்.
சில நெருடல்களோடு .. இரு துருவத்தில நாங்க ரெண்டு பேரும் இருந்தாலும்.. காதலிச்சிட்டு தான் இருப்போம். ஆனா சேரமாட்டோம். இதுதான் மகேஷ் முடிவு. “
ஜான் என்கிற கிரைம் பிரெஞ்ச் இன்ஸ்பெக்டரின் புலம்பல் தொடர்கிறது.
தீடிரென பிரேக் போட்டான் மகேஷ்....
”மகேஷ்.........! அது கபாலி தானே...........! ”
”ஆமா ஆமா சார்... ”
”ஈசியா மாட்டிகிட்டானே மகேசு..............இதுதான் நீங்க பர்ஸ்ட் பார்க்கிற பர்ஸ்ட் என்கெளவுண்டரா மகேஷ்..........?.”
” ஆமா சார்.......”
“ ஒகே பதறாதீங்க ...... இங்க பாருங்க கன் எடுத்து.. இப்படி இப்படி... இரண்டு கையில ஸ்ட்ராங்கா பிடிச்சி......... டிரிக்கர்ல ஆட் காட்டி விரல நுழைச்சி .. ரெடியா........ரெடியா................. வச்சிக்கனும்...
ரெண்டு கண்ணையும் கூர்மையா அவன் ந்டுநெத்திய பார்க்கனும்........
3...........2....................1
டப்...........டப்.....................
------
---------------------
முடிஞ்சது கபாலி கதை........................................
ஹா ஹா.................
என்னோட கல்யாண கனவு வாழ்க்கையை போலவே.
இனி இந்த துப்பாக்கிதான் என்னோட வாழ்க்கை........................!!
துப்பாக்கியும் பேனாவும் எப்போதும் ஒன்னுதான் மகேஷ்...
புரியுதா..............................??? ”
------------
இரா.சந்தோஷ் குமார்.