சுந்தரக்கில்லாடி
சுந்தரக்கில்லாடி
==============
மீளவே முடியாதது மாதிரி
மோகிக்கச்செய்து மோகிக்கச்செய்து
நீ தெளித்த மருந்துகளின் கலவர ரகசியங்களை
கவர்ந்தெடுக்கவே
பாதிராத்திரியின் மறைவில்
உன் சொப்பனக் காடின் பின்புற மதிலேறி
என் போக்கும் வரத்தும்,,,,,,,,,,,,
அங்கே அவளின் சொப்பனக்கூட்டில் பதியும்
முதல் ஆணுருவமே
அச்சொப்பனக் கூட்டிற்கு
இறுதிவரையான சொந்தமாகும் முகம்
என்னும் மூடநம்பிக்கையாகக்கூட
அது இருக்கலாம்,,,,,,,,,,,,,ம்ம்ம்ம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,
போதா நேரங்களில்
யாரோ யாருடனேயோ பேசுவதைப்போல்
பேசிவிட்டு
பின் கள்ளத்தனமாக
கதவெட்டிப் பார்க்கும்
உன் இரண்டாம்பார்வை வேண்டாமெனக்கு
நம் முதல் சந்திப்பிலேயே உனக்கான ஆண் நான்
எனக்கான பெண் நீ
என்பதற்கான அழியா ஞாபகங்களை
தந்துப்போகும்
என் ஆண் பிள்ளைத் தனத்தை
ஆணவவிதைப்பாக்கி போகவேதான்
என் பற்றாக்குறை நேரங்களை
எனைக்காணாமல் துவேசம் கொள்ளும்
வெட்கம் மறந்த
உன் வெறுமைகளுக்கு
அசையாக்கிப்போகிறேன் தெரியாதா ம்ம்ம்ம்,,,,,,,,,,,,,
ஆனால் விலக்கிவிட்டதாய் சபித்த
உன் உதடுகள்தான்
களிமண் ஆனாலும் கண்ணன்தானே என்று
சற்றே ஒற்றிப் பார்க்க
ஒரைப்பார்த்து வா என்கிறது
அந்த பஞ்சபூதங்களுக்கான
வழிபாடுகள் நடக்கின்ற
ஒரு வைசாக இராத்திரியில்
வந்தேன் தின்றேன் ,,,
இதோ இப்பொழுது பாரேன்
கடிக்க கடிக்க முளைகொள்கிறது
கழிஞ்சுப்போன எத்தனையோ
ராத்திரிகளைப் போல அல்ல
அன்றைய ராத்திரி
ஏதோ தீராத ராத்திரிபோல ம்ம்ம்ம்,,,,,,,,,,,,,,,,,,,,
நானோ ஒரு நாடகக்காரன்
மனநீர் மோகக்கிணறுக்கொத்தி என்றேன்
இல்லை அதற்கும் மேலே
மூடியினுள்ளே அடைப்பட்டுக்கிடக்கும்
கொதியுள்ள நீராவியைப்போலே
காத்துவைத்தவைகளை எல்லாம்
கணக்குப்போட்டு சொல்லிடுகிறாயே
யார் நீ
பண்டு அசுர குருவான
சுக்கிராச்சாரியின் மகள்
தேவயானியை மோகிப்பித்து
மிருதுசஞ்சீவினி ரகசியத்தை
களவாடிப்போன கள்ளனைப்போலும் அல்ல
சதிகாரனும் அல்ல
பாதாள தேவதைகளின் கருணையினால்
தண்மைக்கொண்டு
ஊற்றுநீர் சுரக்கும் தேவகுமாரனைப்போல்
யாரோ ஒருவன்
யார் நீ என கேட்கிறாள்
எல்லாவற்றிற்கும் நீள் சிரிப்பையே
காரணங்களாக்கி
ஒரு ஒட்டகம்போல
தேக்கிவைத்திருக்கும்
இந்த சுந்தரக்கில்லாடியிடம்,,,,,,,
அனுசரன்