நீ நீ நீஎல்லாம் நீயானாய்

என் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு
நெருங்கிய தோழியானாய்

புரிதலின் புனிதத்தால் - என் உள்ளத்தை
களவு கொண்டு
ஆசை காதலியானாய்

காதலின் நெருக்கத்தால்
மங்கையாய் இருந்த நீ
மாங்கல்யம் ஏந்தி
ஆருயிர் மனைவியானாய்

உள்ளங்களின் உணர்ச்சி
உடல்களுக்கும் தொற்றிக்கொள்ளவே
மனதளவில் குழந்தையான நீ
என்னையும் சேர்த்து
இரு குழந்தைகளுக்கு தாயானாய்

விதியின் ஆபத்தான விளையாட்டுகளில் இருந்து
என்னை காக்கும் தந்தையானாய்

துவண்டு போகும் நேரத்தில்
என் தூணான தன்னம்பிக்கையானாய்

என் ஆசைகளுக்காக
அன்பான அடிமையானாய்

இப்படி எல்லமுமாயான நீ
என் வாழ்க்கையானாய்

நாத்திகனான என் கண்களுக்கு - நீ
நடமாடும் கட்வுளானாய்

என் அன்பே ..

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (6-Feb-15, 2:38 pm)
பார்வை : 87

மேலே