சிற்பம்

அன்று ---
குருதியை வியர்வையாய் வடித்து
நான் வாங்கிய நிலமும், வீடும்

இன்று---
கைம்மாற ஏற்பாடாகின்றன
உழைத்தறியா என் பிள்ளையால்...


அன்று---
ஒவ்வொரு கல்லாய்
நான் வடித்த சிற்பமாம் வீடு
என் பெயர் சொல்லும் என்றிருந்தேன்...

இன்றோ---
வலியறியா மகன்
அச்சிற்பம் தனக்கு வேண்டாமென்கிறான்;
உடைத்தெறிய முற்படுகின்றான்....

வடித்த எனக்கல்லவோ தெரியும்-
அந்த வலியும், அது தந்த சுகமும்....

நெஞ்சில் முள் தைத்தபோதும்
பொறுத்துக் கொள்கின்றேன்----

கேட்பது மகனல்லவா?

எழுதியவர் : த .ராமிஷா (6-Feb-15, 9:48 pm)
Tanglish : sirppam
பார்வை : 104

மேலே