மாதர் மாண்பு
ஐந்து கோடி உயிரணுவை முந்திக் கொண்டுப் பிறந்தவள் தான் நானும் பெண்ணாக.....
இது சளைத்தவள் ஆவேனா என அகங்காரம் அல்ல அடிமையாக மறுக்கிறேன்..
மென்மைக்குள் வன்மை கண்டல்லவா பிரம்மன் பெண்ணுக்கு படைத்தான் கருவறையை...
மெல்லிளங்கோதை என சிலம்பு வர்ணித்தவள் தானே...கண்ணீர் கூட எரிக்கும் என்று காட்டிய கண்ணகி..
ஆளவந்தவன் ஆண் என்றால் அவனையும் ஆக்கியவள் பெண்ணல்லவா...
ஆயிரம் அர்த்தங்கள் தரும் தையலின் கயல்விழிகள் கண்ணீரில் நீந்த வைப்பது மடமையின் உச்சமல்லவா...
தத்தை அவளை தங்கத்தட்டில் தாங்க வேண்டாம் தராசு தட்டில் தோற்கடிக்காமல் இருந்தாலே போதும்...
ஆணை அவமதிக்கும் முயற்சி அல்ல இது பெண்மையை போற்றும் கிறுக்கல்கள்....