அம்மா பசிக்குது

உண்ண பதம் பார்க்காமல் பருக்கையின் அளவை பாரக்கும் தாயின் உள்ளம் தடுமாறுகிறது குறைகுடமாய்...


பசியில் குலைகிறது பச்சிளங்குழந்தையின் பிஞ்சு வதனம் வெந்நீரில் சாதமாய்...


சத்துணவு கிடைக்கும் களிப்பில் ஒட்டுத்துணி ஒட்டாமலே கல்விசாலை செல்ல கால் இடறியது அம்மாவுக்கு அன்னம் இல்லையென...

இல்லை என்பதே இனி இல்லை எனும் தெருமுனை வாசகம் பலனளித்தது இதழோர வெற்று சிரிப்பாய்...


நிலாச்சோறுக்கு நிலா காத்திருக்க சோறில்லாமல் தேய்கிறது குழந்தையின் குட்டி உள்ளம்....


அன்பை பொழியும் அம்மாவால் மனம் முழுதும் நிறைந்தது வயிறு மட்டும் சப்தமிடுகிறது உணவை கேட்டு...

எழுதியவர் : Monisha (7-Feb-15, 9:20 am)
Tanglish : amma pasikkuthu
பார்வை : 206

மேலே